Sunday, July 18, 2010

Ravaanan

படம்: ராவணன்
இயக்கம் : மணி

நடிப்பு: விக்ரம், ஐஸ், பிரிதிவி, கார்த்திக், பிரபு, பிரியாமணி, ரஞ்சிதா மற்றும் பலர்.

மகாபாரத கதையை (தளபதி) வெற்றி பாடமாக தந்த மணியின் அடுத்த முயற்சி இந்த திரைபடம். இந்த கதையை பற்றி சொல்வதற்கு முன் மணியை பற்றி சில வரிகள். மணியின் அனைத்து படங்கலிலும் ஒரு கதை ஒரு பொது ” பிரச்சனை” என்று இரண்டு part இருக்கும் .அப்படிபட்ட கதைதான் “ராவணன்”. இதில் கதை ராமாயணம் “பிரச்சனை” என்ன? இதற்கு பதில் கடைசியில் சொல்கிறேன்.
மணியின் மற்றும் ஓரு பலம் அவர் இது வரை வெளிநாடே சென்றதில்லையாம்.அவருடைய அனைத்து படங்களும் முக்கியமாக பாடல்கள் இந்தியாவில் படமாகபட்டவை.‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் படத்தை எடுக்க வேண்டும் வெளிநாட்டில்”என்ற கருத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார் மணி.

மணிக்கும் மழைக்கும் ஓரு பந்தம். அவருடைய எல்லா திரைபடங்களும் மழையை ஒரு பாத்திரமாகவே அவர் சித்தரித்திருபார். இத்திரைபடத்தில் அது கொஞ்சம் அதிகம். படம் பார்த்து முடித்ததும் நமக்கே தலையை துவட்ட வேண்டும் என்ற தோன்றும் அப்படி அனைத்து காட்சிகளும் மழையில்தான்
படத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் ( அதாவது மழை மற்றும் கதையின் நாயகி ) சேர்ந்து வரும் காட்சிகள் கண்களுக்கும் விருந்துதான்.

“அவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது” என்ற வைரமுத்துவின் வரிகள்தான் inspiration ஆக இருந்திருக்க வேண்டும் என்ற நினைகிறேன்.

ஒரு வார்தையில் கதை :
ராயமாணம் (ஆம் ராமாயணத்தில் கொஞ்சம் உள்டா பண்ணி இருக்கிறார்) இதில் ராமராக-பிரிதிவி, சீதை-ஐஷ், ராவணன்-விக்ரம், ஹனுமன்-கார்த்திக், சூர்பனகை-பிரியாமணி.

தனது தங்கையின் இழப்பிற்கு பழிவாங்குவதற்காக, sp(prithiviraj) மனைவியை கடத்தி வருகிறார் வீரா. பிறகு அவள் எப்படி கணவனிடம் சேருகிறார், வீராவின் முடிவு என்ன என்பது தான் கதை.
முதல் காட்சியில் ஐஷ்வர்யாவை சுடுவதற்காக ஒரு மலை உச்சிக்கு கொண்டு செல்கிறார் வீரா. துப்பாக்கியை கண்டு சற்றும் பயப்படாத ஐஷ் “என்னை கொல்வதற்கு நீ யார்” என்று கேட்டு மலை உச்சியில் இருந்து குதித்து விடுகிறார்.

இதை கண்டு வியக்கும் வீரா அவளை காப்பாற்ற பின் தொடர்ந்து குதிக்கிறார். ஐஷின் வீரத்தை கண்டவுடன் வீராவிற்கு அவள் மேல் ஒரு ஈர்பு எற்படுகிறது “உசுரே போகுதே உசுரே போகுதே” என்று பாட்டுடன் தொடங்குகிறது படம் .

கதையில் ராமனுக்கு உதவும் ஹனுமனாக karthick. அவரை ஹனுமன் போல் சித்தரிக்க வேண்டும் என்பதற்காகவே, அவருடைய அறிமுக காட்சியில் அவரை மரத்திற்கு மரம் தாவவைத்து இருக்கிறார்கள். கார்த்திக் முதலில் சென்று சீதாவை பார்த்து, வீராவிடம் பேசி சமாதானமாக போகலாம் என்னும் போது, sp சமாதானம் பேச வந்த வீராவின் தம்பியை சுட்டுவிட சூடு பிடிக்கிறது கதை.

இந்த திரைபடத்தில் ஒலியைவிட ஒளி தான் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆயிஷ,வீராவின் அறிமுக காட்சி, ஐஷுவை தன்னுடன் தங்கும் படி கேட்கும் பொழுது, தோணியில் சுற்றிவரும் காட்சி, இறுதி சண்டையில் பாலத்தின் காட்சி என்று சொல்லி கொண்டே போகலாம்.

அதே சமயத்தில் நாம் “கலை”யையும் மறந்து விட கூடாது.படம் முழுவதும் காட்டில்தான் அதில் பாதிக்கு மேல் (பாலம் உட்பட) செட்தான் என்பது கவனிக்க படவேண்டிய ஒரு விஷயம்.

அது சரி “அஞ்சலி” திரைபட்த்தில் வரும் அனைத்து flatயும் செட் போட்ட நம்ம மணிக்கு இது ஒன்றும் புதிது இல்லை.

சீதை:
இந்த படம் வருவதற்கு முன்பே எனக்கும் என் நன்பனுக்கும் (vivek) ஒரு சிறிய போட்டி.

உலகத்தில் ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்று தெரிந்து நம்மில் பலர் அதை ஒப்பு கொல்வதில்லை.சரி எங்களுக்குள் போட்டி என்ன தெரியுமா, சீதை ராவணனின் நற்குணம் அறிந்து அவர் மீது காதல் கொள்வால் என்பது தான் எனது வாதம். இல்லை என்றான் என் நன்பன். அதனால் தான் படம் வரும் முன்பே “விடிய விடிய படம் எடுத்து சீதைக்கு கணவன் ராவணன் என்று சொல்வாரா மணி” என்று orkut ல் போட்டிருந்தேன்.

நான் என் நன்பன் வைத்த போட்டியில் வெற்றியும் பெறவில்லை, தோல்வியும் அடையவில்லை. ஆம் படத்தின் முடிவில் ஐஷுவின் முடிவு என்ன ? அதை பார்வையாளர்கள் கையில் விட்டு விடுகிறார் மணி.

ராமன் சந்தேகப்பட்டதற்காக தீ குளித்தாள் புராணத்து சீதை, அதே sp(prithviraj) சந்தேகப்பட்டதற்காக ரயில்லில் இருந்து குதிக்கிறார் நமது மாடர்ன் சீதை (கவலை பட வேண்டாம், நின்று கொண்டிருக்கும் ரயில்லில் இருந்து தான்) .

அன்று ராமன் ராவணனை அழித்து சீதையை காப்பாற்றியப்பிறகு சந்தேகிக்கிறான் காரணம் இல்லாமல். இங்கு தான் மணிரத்தினம் புராணைத்தில் இருந்து சற்று வேறுபடுகிறார். இந்த ராவணனை அழிப்பதற்காக சீதை மீது சந்தேகப்படுவதை போல் நடிக்கிறார் நமது hero.
வீரா
விக்ரமின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது ஆனால் இது விக்ரமின் சிறந்த நடிப்பு என்று நான் கூற மாட்டேன்.

கதை ராமாயணம், அந்த பொதுப்பிரச்சனை என்ன? அடுத்தவன் மனைவி மேல் ஆசை படுவதுதான். இந்த காலகட்டத்தில் இது தான் பெரிய பிரச்சனை, 2008 ஆம் ஆண்டில் “extra marital affair “ல் பதிவான வழ்க்குகள் மட்டும் 40,000 துக்கும் மேல் (இந்தியா முழுவதும்).அப்படி பட்ட ஒரு சமுதாய பிரச்சனையை மிக சிறப்பாக காட்டியது போல் என் கண்களுக்கு தோன்றியது.

இந்த முடிவு அனைத்து ஆண்களுக்கும் உள்ளே இருக்கும் ராவணன் வெளியே வராமல் இருக்க ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்பது எனது கருத்து.

முடிவுரை

110 கோடியில் திருத்த பட்ட ஒரு இதிகாசம்.

Rating : 3.5/5.0

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Interesting review arun... truly refreshing... Really enjoyed reading it so much that I signed up in eblogger!

    ReplyDelete
  3. I did not see the movie yet. The review inspires me to watch it now. Very interesting.

    ReplyDelete