படம் : விண்ணை தாண்டி வருவாயா
இயக்குனர் : கௌதம்
தமிழ் திரை உலகை வேறு திசையில் கொண்டு செல்ல விரும்பும் சிலருள் இவரும் ஒருவர்.படத்தில் title முதல் endcard வரை அனைத்திலும் புதிய கோணம் ,: பெயர் போடும் பொழுது தமிழிலும் அதன் நிழல் ஆங்கிலத்திலும் வருவதும் , சிம்புவின் அமைதியான நடிப்பும், திரிஷவின் அழகான தோற்றம், ஒரு camera manin ( kaka kaka) comedy என்று புதுமைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
ஒரு வரி கதை :
ஒரு அழகான கிறிஸ்துவ் பெண் ( அழகான என்றாலே குழப்பமான என்று சொல்லாமலே புரியும் ) ஒரு லட்சியத்தோடு இருக்கும் ஆணை( ஹிந்து ) காதலிக்கிறாள் .
படத்தில் திருப்பங்கள் குர்மையாக இருப்பதால் திரை கதை சற்று தள்ளாடுகிறது , பாடல்கள் இசை தட்டில் சிறப்பாக இருந்தாலும் , அது திரை கதையின் வேகத்தை குறைகிறது என்பது எனது கறுத்து , என்னினும் நீலத்தை நீக்கினால் வானம் ( விண் ) இல்லை அது போல ARR பின்னணி இசையை நீக்கினால் VTV இல்லை . இந்த வாதம் எல்லா படகல்கும் பொருந்தினாலும் , இந்த படத்திற்கு சற்று அழுத்தி சொல்ல வேண்டும்.
என்னை தாகிய காட்சி:
New york நகரில் , Tirisha , simbu வை பார்த்து உன் காதலியை பற்றி சொல் என் கேட்க, அவன் சொல்ல தொடங்குகிறான் , அதில் " அவளுக்கு cinema na படிக்காது jessy " என்று தட்டு தடுமாறி அவன் சொல்ல , tirishavin வழிகள் விரிய , ARR பின்னணி இசை கதர் , கலங்கியது என் கண்கள்
ஏன் இந்த பெயர் :
நான் பல காரணங்களை யோசித்தேன் அனால் என்னக்கு தோன்றியது இதுதான் . விண் அதாவது வானம் என்பது யாராலும் கற்பனை செய்ய முடியாத ஒரு எல்லை, இதை போல கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குழப்பதை உடையது நமது கதாநாயகியின் மனம் , அதை தாண்டி வந்து என்னை காதலிபாயா என்று கதாநாயகன் கேட்பது போல் அமைந்து இருக்கிறது கதை.
எனது தீர்ப்பு : இந்த விண்ணிற்கு முன்று நட்சதிரங்கள் .
தொடரும் ................................
Monday, March 8, 2010
Subscribe to:
Posts (Atom)
